என்னுடைய சாட்சி

நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். என் சிறு வயதில் இருந்தே நல்ல கடவுள் பக்தி உள்ளவளாக இருந்தேன். என் வாலிப வயதில் பள்ளிக்கூடத்தில் நன்றாக படிப்பவளாகவும், எல்லா தோழிகளுடன் நன்றாக பழகுபவளாகவும் இருந்தேன். மனிதர்கள் மேல் மிகவும் அன்பு காட்டுபவளாகவும், அன்பை எதிர்பார்ப்பவளாகவும் காணப்பட்டேன். எனக்கு பதினாறு வயதாய் இருக்கும் போது, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் தெரிந்து எடுக்கும் பாடத்திற்கு தகுந்தார் போல் வகுப்பிற்கு போக வேண்டும். என் தோழிகள் எல்லாரும் வேறு வேறு பாடபிரிவுகள் எடுத்து வேறு வகுப்பறைக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் என் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்க வராத ஒரு காலைவேளையில், நான் தனிமையாக என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
அப்பொழுது மற்ற மாணவிகள் வகுப்பறையில் இருக்கும் போதும், என் கண்கள் திறந்திருக்கும் போது, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய வண்ணமாக எனக்கு தரிசனம் கொடுத்தார். அவரது மேல் இருந்து கீழ் வரை இரத்தம் வடிந்ததை பார்த்தேன். அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இயேசு இவ்வாறு என்னோடு பேசினார் : “அழிந்து போகும் மனிதர்கள் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாயே, இதோ உனக்காக என் ஜீவனையே கொடுத்திருக்கிறேன், என்னை நேசிக்க மாட்டாயா?” என்று இயேசு பேசின வார்த்தைகளை கேட்டவுடன் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் உலகம் கொடுக்கக்கூடாத அன்பு, வார்த்தையால் விவரிக்க முடியாத தெய்வீக அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்பட்டது.


அதுவரையில் எத்தனையோ தெய்வங்களை வணங்கியிருக்கிறேன், எந்த தெய்வத்தினுடைய சத்தத்தையும் கேட்டதேயில்லை. இயேசுவின் அன்பான வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கும் போதே, இவர் தான் வானத்தையும், பூமியையும் உண்டாக்கின, என்னையும் உருவாக்கின சிருஷ்டிகர்த்தா என்பதை தெரிந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஒரு தேடுதல்,ஒரு வெற்றிடம் இருக்கும். அதில் நிறைவு கிடைப்பதற்குத்தான் அங்கும் இங்கும் தேடி அலைந்து திரிகிறோம். இயேசு அன்றைக்கு என் உள்ளத்தில் வந்தவுடன், அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டு, திருப்தியாகி,பெரும் சந்தோஷமும், சமாதானமும் கிடைத்தது.

“This is the Lord’s doing; This is marvelous in our eyes.” (Psalms 118:23)
“No man shall be able to stand before you all the days of your life; as I was with Moses, so I will be with you. I will not leave you nor forsake you.” (Joshua 1:5) According to this promise word, the Lord Jesus Christ is with me and leads me so far. Praise be to God!
“The Spirit of the Lord God is upon me, Because the Lord has anointed me To preach good tidings to the poor; He has sent me to heal the brokenhearted, To proclaim liberty to the captives, And the opening of the prison to those who are bound;To proclaim the acceptable year of the Lord, And the day of vengeance of our God;To comfort all who mourn,To console those who mourn in zion, To give them beauty for ashes,The oil of joy for mourning,The garment of praise for the spirit of heaviness;That they may be called trees of righteousness,The planting of the Lord, that He may be glorified.”
According to this promise word (Isaiah 61:1-3), The Spirit of the Lord God is upon me. He has anointed me to preach the gospel of Jesus Christ. Glory be to God!!
Jesus said in Mark 16:15,16 ,“And Jesus said to disciples , “Go into all the world and preach the gospel to every creature.
He who believes and is baptized will be saved; but he who does not believe will be condemned.
Following His command, I come to you with immense joy through this platform to share and proclaim the good news of salvation that Jesus loves you and came for you and me!
Your sister in Christ,
Grace Premalatha.