Grace Premalatha Ministries

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.எல்லாரும் பாவஞ்செய்து,தேவமகிமையற்றவர்களாகி
(ரோமர் 3:10-12,23)

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23)

மெய்யாகவே இயேசு நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
(ஏசாயா 53:4-6)

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." (ரோமர் 5:8)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
(யோவான் 3:16-18)
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
(ரோமர் 10:9-11)

மேற் சொல்லிய வேதவார்த்தைகளின்படி நீங்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு கீழ் சொல்லிய ஜெபத்தை உங்கள் முழு மனதோடு செய்யுங்கள்.

இந்த நிமிடத்திற்கு முன்னாள் வரை, உங்களுடைய வாழ்க்கை எப்படி பட்டதாயிருந்தாலும், எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் சரி, இப்பொழுது நீங்கள் மனம் திரும்பி, இயேசு உங்கள் பாவங்களை எல்லாம் சிலுவையில் ஏற்றுக்கொண்டு, அவர் உங்கள் சார்பில் மரித்தார் என்று நம்பி, விசுவாசித்து, இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும், உங்கள் ஒரே தெய்வமாகவும் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, உங்கள் வாயினாலே அறிக்கை பண்ணும் போது, நீங்கள் பாவமன்னிப்பு பெற்று இரட்சிக்கப்படுவீர்கள்.

இரட்சிகப்படுவது என்றால் விடுதலை பெறுவது. பாவத்தில் இருந்து மட்டும் அல்லாமல்,சாபத்தில் இருந்தும், வியாதியில் இருந்தும், விடுதலை தருவதற்காகவே இயேசு இரத்தம் சிந்தினார், தம் உயிரைக் கொடுத்தார்.

ஜெபம்

தேவனே, நீர் உம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எனக்காக இந்த உலகிற்கு அனுப்பினீர் என்றும், அவர் எனக்காக மரித்தார் என்றும், நீர் அவரை மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுப்பினீர் என்றும் விசுவாசிக்கிறேன். இயேசுவை என் சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளுகிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன். இயேசுவே என் இருதயத்திற்குள் இப்பொழுது வாரும். நன்றி ஆண்டவரே! ஆமென்.

ஆமென். இப்பொழுது இயேசுவின் குடும்பத்திற்குள் நுழைந்துவீட்டிர்கள்! இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்! கர்த்தராகிய இயேசுவிற்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.

தொடர்ந்து அருகில் உள்ள கிறிஸ்தவ சபைக்கு செல்லுங்கள். ஒரு பைபிள்(வேதபுத்தகம்) வாங்கி தினமும் அதை வாசிக்கவும். இயேசு அதன் மூலம் உங்களோடு பேசுவார். ஜெபத்தில் நீங்கள் அவரோடு பேசலாம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஆன்லைனில் வேதபுத்தகம் வாசிக்கலாம்.

மேலும் கேள்விகள் இருந்தால் இந்த ஈமெயிலுக்கு அனுப்பலாம்.
info@gracepremalathaministries.org

Amen. Now you have entered the family of Jesus! In the name of Jesus, I greet you! Glory be to our Lord Jesus! Amen.

error: Content is protected !!
Scroll to Top